வியாழன், 11 ஜூலை, 2019

பெற்றோரிடம் தரக்குறைவாக பேசிய தலைமையாசிரியர்... சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ...! July 11, 2019

Image
கோவையில் அரசுப் பள்ளியில் மாணவரை சேர்க்க முயன்ற பெற்றோரிடம் தரக்குறைவாக அப்பள்ளி தலைமையாசிரியர் பேசிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்பாபு. இவரது மகன், கண்ணம்பாளையம் அரசுப்பள்ளியில் கடந்த ஆண்டு 9ம் வகுப்பு படித்த நிலையில், சில காரணங்களால் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதியுடன் ஒண்டிபுதூர் அரசு ஆண்கள் பள்ளியில் மீண்டும் 9ம் வகுப்பிலேயே, தமது மகனை படிக்க அனுமதிக்குமாறு அம்மாணவனின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவீந்திரன் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்க அம்மாணவனின் பெற்றோர் சென்றபோது, மாவட்ட கல்வி அதிகாரி அளித்த அனுமதி கடிதத்தை தூக்கி எறிந்ததுடன் தரக்குறைவாகவும் தலைமை ஆசிரியர் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

credit ns7.tv