ஆதாருடன் பான் எண் இணைக்காவிடில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடியாகாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆதார் திட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஆதார் எண்ணையும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பயன்படும் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை 22 கோடி பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 18 கோடி பான் எண் இணைக்கவில்லை எனவும் நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என அண்மையில் மத்திய அரசு தன் பட்ஜெட்டில் அறிவித்தது.
எனவே, வரும் செப்டம்பர் 1ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காத பான் எண்கள் காலாவதியாகி விடும் எனவும், அதன்பின் புதிதாக விண்ணப்பித்தே பான் எண் பெற வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.