தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு மருத்துவ துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான NEET நுழைவுத் தேர்வு. அதை போல தற்போது , எம் சி ஐ எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு புதிதாக தேசிய மருத்துவ கவுன்சில்(NMC)என்ற அமைப்பை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மேலும் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு NEXT என்ற ஒரு புதிய தேர்வையும் அறிமுகப்படுத்த உள்ளது.
இத்திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து , உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
credit ns7.tv