வியாழன், 8 ஆகஸ்ட், 2019

370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! August 08, 2019

Image
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஐ ரத்து செய்வதற்கான மசோதா கடந்த திங்கள்கிழமை மாநிலங்களவையிலும், கடந்த செவ்வாய் கிழமை மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டன. 
இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மனோகர் லால் ஷர்மா என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 
எனினும், வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதி N V Ramana தலைமையிலான அமர்வு, இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 
credit ns7.tv