வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

கடல் வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கடலுக்குள் 60 அடி ஆழத்தில் தேசியக் கொடி

Image
நாட்டின் 73 வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கடலுக்குள் 60 அடி ஆழத்தில் தேசியக் கொடி ஏந்தி ஒருவர் வித்தியாசமாக சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார். 
சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் கடல் மாசடைவதை தடுக்கவும், கடல் வளத்தை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலின் 60 அடி ஆழத்தில் தேசியக் கொடி ஏந்தி சுதந்திர தினத்தை கொண்டாடினார். 
ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரான இவர் ஆழ்கடலில் மீன்கள் செல்லும் வழியில் நீந்தியது வித்தியாசமாக இருந்தது. இவரின் இந்த வித்தியாசமான முயற்சியால் பொதுமக்களிடம் ஏற்படுத்த முயற்சிக்கும் விழிப்புணர்வு எளிதில் எட்டும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

credit ns7tv