credit ns7.tv
அமெரிக்காவில் உள்ள வணிக மையம் ஒன்று பலாப்பலத்தை தர்பூசணி போல வெட்டி விற்பனை செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் Whole Foods என்ற பழங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் வணிக மையம் இயங்கி வருகிறது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களில் தர்பூசணி, பலாச்சுளை ஆகியவை பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் ஆச்சர்யப்படத்தக்க வகையில், தர்பூசணி பழத்தை வெட்டி விற்பனை செய்வது போல பலாப்பழத்தையும் அது போன்று கூம்பு வடிவில் வெட்டி பேக் செய்யப்பட்டிருந்தது.
பலாப்பழம் பொதுவாக அதன் மேல்புற தோல் உரிக்கப்பட்டு பலாச்சுளை மட்டும் தனியே எடுத்து விற்பனை செய்யப்படும் நிலையில் இப்படி கூம்பு வடிவில் வெட்டி விற்பனை செய்யப்படுவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். whole Foods கடைக்கு பழம் வாங்கச் சென்ற மெய் டான் என்ற பெண்மணி அந்த புகைப்படத்தை பதிவிட்டு, பலாப்பழத்தை இப்படி வெட்டி விற்பனை செய்வது கண்டு நான் அழுவதா இல்லை சிரிப்பதா என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.