இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள பிரிட்டன், ஜெர்மனி மக்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், யாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் திரும்பிச் செல்லுமாறு மாநில உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு யாரும் சுற்றுலா செல்லவேண்டாம் என பிரிட்டன் மற்றும் ஜெர்மனி அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
credit ns7.tv