எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தவர்கள், படிப்பை பாதியில் கைவிடுவதாக இருந்தால், ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் படிப்புக்களில் சேர்ந்த மாணவர்கள், இன்றும் நாளையும் கல்லூரியை விட்டு நிற்கும்பட்சத்தில், கலந்தாய்வின்போது அளிக்கப்பட்ட உறுதி சான்றுகளின் படி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதிக்குப் பிறகு கல்லூரியிலிருந்து விலகுபவர்கள், 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் இருந்து விலகி தங்கள் இடத்தை ஒப்படைப்பவர்கள் இன்றைக்குள் அளிக்க வேண்டும் என்றும், அதன் பின் விலகுபவர்கள் ஒரு லட்சம் முதல் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv