சனி, 10 ஆகஸ்ட், 2019

நாளை ஏவப்பட உள்ள பலூன் செயற்கைக்கோள்! August 10, 2019

credit ns7.tv
Image
விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி விக்ரம் சாரபாய் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் பலூன் செயற்கைக்கோள் நாளை அனுப்பப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி விக்ரம் சாரபாய் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் 12 மாணவ, மாணவிகள் தயாரித்த சிறிய வகை செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீமதி கேசன், பலூன் செயற்கைக்கோள் முயற்சி முற்றிலும் மாணவர்களது எனவும், இதனை மாணவர்கள் தான் விண்ணில் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் மாணவர்களின் இந்த சாதனையை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் மூலம் செய்து காண்பிக்கப்படும் என ஶ்ரீமதி கேசன் தெரிவித்துள்ளார்.

Related Posts: