ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து SDPI கட்சியினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில், SDPI கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிடும் நோக்கில், வாஉசி மைதானத்திலிருந்து பேரணியாக சென்ற அவர்கள், பாதியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். அப்போது, மத்திய அரசு காஷ்மீர் தொடர்பான தனது நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதேபோல், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து SDPI கட்சியினர் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில், ஊர்வலமாகச் சென்ற 50க்கும் மேற்பட்ட SDPI கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

credit ns7tv