நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்திருந்தார். மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பொதுமக்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 20 ஆம் வரை ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் பொதுமக்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 20 ஆம் வரை ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
அதன்படி , ஏப்ரல்20 ஆம் தேதிக்குப் பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி உள்ளிட்ட தொழில்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி.
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது.
சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் தங்களது பணிகளைத் தொடரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மத்திய அரசு தொடர்ந்து அனுமதி.
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20 முதல் இயங்கலாம். அதே நேரத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும்.
மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் இயங்க அனுமதி.
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கனரக வாகன பழுதுபார்ப்பு கடைகள் மற்றும் அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம்.
ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த சேவை (ITES) நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊழியர்களின் போக்குவரத்து சேவைகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்களே உறுதி செய்ய வேண்டும்.
ஏப்ரல் 20ஆம் தேதி முதல் நெடுஞ்சாலையோரம் உள்ள ஹோட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம்
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.
மக்கள் வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயம்.
மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் தொடர்ந்து செயல்படலாம்.
ரயில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்து சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் மருந்து பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ராணுவ வீரர்கள் பயணிக்க மற்றும் முக்கியப் பணிகளுக்காக குறிப்பிட்ட ரயில் சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.