ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்குவதற்காக தமிழக அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பது குறித்த அறிக்கையை வருகிற 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கபட்டத்திலிருந்து போடப்பட்ட வழக்குகள் மற்றும் பிற விவரங்கள்
► ஜூலை 1, 2015 - இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
► இதைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதத்தில் ஹெல்மெட் அணியாத காரணத்தினால் ஒரு லட்சத்து 57 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
► கடந்த ஆறு மாதத்தில் சீட் பெல்ட் அணியாத காரணத்திற்காக 49 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
► 2016-ம் ஆண்டு ஹெல்மெட் அணியாததால் 4,091-பேர் விபத்துகளில் பலியாகினர்.
► இதேபோல், 2017-ம் ஆண்டு ஹெல்மெட் அணியாததால் 2,956-பேர் பலியாகினர்.
► அதேநேரம், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலானதிலிருந்து பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது.
► தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
► வாகனம் வாங்கும்போது டீலர்கள் ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று, மோட்டார் வாகன சட்டம் விதி 1989, பிரிவு 138-4-F கூறுகிறது.
► 2018-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.