இந்திய எல்லைப்பகுதிகளில் உள்ள அச்சுறுத்தல்களை கண்காணிக்க உதவும் அதிநவீன ரேடார்களை கொண்ட ரிசாட்-2 பி.ஆர்.1 செயற்கைக்கோள் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரிசாட்-2 பிஆர் 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு திறன் மற்றும் துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் திறன்களை கொண்ட ரிசாட்-2 பிஆர் 1 நாள் ஒன்றுக்கு ஒரே இடத்தை இரண்டு முதல் மூன்று முறை புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்டது. அனைத்து வானிலை நிலைகளிலும் புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்ட செயற்கைக்கோள் பாதுகாப்பு படையினருக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.
கடலில் எதிரி நாட்டு கப்பல்களை அடையாளம் காணவும் இது உதவும். இந்திய பெருங்கடலில் சீன கடற்படை கப்பல்கள், அரபிக்கடலில் பாகிஸ்தான் போர் கப்பல்களை கண்காணிக்கவும் இது பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source ns7.tv