வங்கக் கடலில் நிலைக் கொண்ட ஃபானி புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசாவை நொக்கி சென்று கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஃபானி புயல், வரும் 3ம் தேதி நண்பகலில் ஒடிசா மாநிலம் தெற்கு பூரி பகுதியில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திர மாநிலம் ஸ்ரீக்குளம், விஜயநகரம், விசாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இதனால் மழை வெளுத்து வாங்கியது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் நீண்ட சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
மரங்கள், விவசாய பயிர்களில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்துகளை நிறுத்திவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
source : ns7.tv