புதன், 1 மே, 2019

மனிதர்களின் குப்பைத்தொட்டியாக மாறிவரும் எவரெஸ்ட்! May 01, 2019

Image
நேபாள அரசின் Sagarmatha Cleaning Campaign மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 3000 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகிறது. சாலையின் நடுவிலும், மலைப்பகுதிகளிலும் அதீத அளவிலான குப்பைகள் கொட்டப்படுவதால் அதிக மாசு ஏற்பட்டு நோய்தாக்கத்திற்கும் வழிவகுக்கிறது. குப்பைகளை அகற்ற அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், நாட்டில் குப்பைகளின் அளவில் பெரிய மாற்றம் இல்லை என்றே கூறவேண்டும்.
இந்நிலையில், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்திலும் குப்பைகளை மனிதர்கள் கொட்டி வைத்துள்ளனர். இதனை அகற்றுவதற்கான முயற்சியில் நேபாள அரசின் Sagarmatha Cleaning Campaign ஈடுபட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்பவர்களுக்கான உணவு, குடிநீர் போன்றவற்றை அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ளது.
பல நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த முகாமின் மூலம் தற்போதுவரை 3000 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள குப்பைகளை அகற்ற 2.3 கோடி நேபாளி ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்தார். அந்நாடின் சுற்றுலாத்துறை, அரசு, ராணுவம் உள்ளிட்டோர் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
source  ns7.tv