பெற்றோர், ஆசிரியர்கள் அளித்த ஊக்கமே நீட் தேர்வில் மாநில அளவில் 5-ம் இடம் பிடித்ததற்கு காரணம் என கிராமப்புற மாணவியான பிரியங்கா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்த மாணவர்களில் 22 பேர், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதையொட்டி, பள்ளி நிர்வாகம் சார்பில் கேக் வெட்டி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய, நீட் தேர்வில் 643 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 5ம் இடம் பிடித்துள்ள கிராமப்புற மாணவியான பிரியங்கா, நீட் தேர்வு கடினமானது அல்ல என்றும், கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வைக் கண்டு அச்சப்படத் தேவை இல்லை என்றும் கூறினார். அதேநேரத்தில், மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுதுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்