போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கடந்த 5 மாதங்களில் 55 ஆயிரத்து 429 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இளைஞர்கள் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி உயிர் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டு மே மாதம் வரை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 7 லட்சத்து 88 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
8 கோடியே 65 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை மூலம் 5 கோடியே 86 லட்சம் ருபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 55 ஆயிரத்து 429 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.