நீட் தேர்வால் நேர்ந்த உயிரிழப்புகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாமக நிறுவனர் ராமதாசும் தான் காரணம் என மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராமதாசும், எடப்பாடி பழனிசாமியும் தான் நீட் தேர்வை ஆதரித்ததாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் மும்மொழி கொள்கையை மறைமுகமாக திணிக்கும் வகையில், முதலமைச்சர் ட்விட் செய்ததாகவும், எதிர்ப்பு கிளம்பவே, அதனை நீக்கியதாகவும் தயாநிதி மாறன் விமர்சனம் செய்தார்.