தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படிதான், வெளிமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், என அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், நலத்திட்டப் பணிகளுக்கான அடிக்கல் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, அவர் இவ்வாறு கூறினார். சமீபத்தில் மின்சார வாரியத்திற்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் வெளிமாநிலத்தவர்கள், உதவிப் பொறியாளர் பணிக்கு தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார் அமைச்சர் தங்கமணி.
மேலும், இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல், அவர்கள் பணிக்கு சேர்ந்து 2 ஆண்டுகளில் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறு கற்றுக் கொள்ளாதவர்கள் பணியில் நீடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மின்வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என்றும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்