மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் வரும் 15-ந் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. நிதி ஆயோக் குழுவின் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இநத கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். அப்போது, தங்களது மாநிலத்திற்கு தேவையான நிதி தேவைகள் குறித்து, முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் பேசவுள்ளனர்.
இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநில திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க எந்தவித அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது பலனற்றது என குறிப்பிட்டுள்ளார்.