ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகுவது, உலகிற்கு விடுக்கப்பட்ட அபாயம் என்பதை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பருவநிலை மாறுபாடுகள் காரணமாக, ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருவது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டிக் பகுதியில் கடந்த 1990 ஆண்டுகளில் காணப்பட்ட பனிப்பாறைகள் வெப்பமாதல் காரணமாக தற்போது மூன்று மடங்கு அளவிற்கு உருகியுள்ளதாகவும், இதனால், கடல் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதையும் அறிவியல் வல்லுநர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். தற்போது ஆர்டிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெப்ப நிலை 3.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு காணப்படுகிறது.
இது குறித்து சுற்றுச்சூழல் அறிஞர்கள் மேற்கொண்ட சோதனையில், உலக வெப்பமாதல் காரணமாக காற்றுப்பரப்பு வெப்படைந்து பனிக்கட்டி உருகி கார்பன்டை ஆக்சைடு, ஆக்ஜினாகவும் வெளிப்படுவதும், நீரில் வளரும் சிறிய மீன் வகைகளை பெரிய வகை மீன்களும், போலார் கரடிகளும் உணவாக உட்கொள்ளும் வாழ்க்கை சுழற்சி முறையிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்துள்ளதை கண்டறிந்துள்ளர். பருவ நிலை மாறுபாடுகளால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை தடுத்திடும் நடவடிக்கைகளை, இனியும் காலம் தாழ்த்தாமல் உலக நாடுகள் முன் எடுத்து செல்ல வேண்டிய அவசியத்தை இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் அறிவியல் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
சமீப காலமாக இப்பகுதியில் வசிக்கும் போலார் கரடிகளின், வாழ்வியல் நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. உணவிற்காக இடம்பெயர்ந்திடும் அவலமும், அவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தும் வருகிறது. இப்பகுதி வாழ்வியல் விலங்குகளின் உணவு சங்கிலி பாதிப்பு, இனி வருங்காலங்களில் உலகில் உள்ள மற்ற உயிரினங்களிடமும் பிரதிபலிக்கும் என்ற அறிவியல் வல்லுஞர்களின் கூற்றையும் மறத்து ஒதுக்கி விட இயலாது.
வெப்பநிலை உயர்வின் காரணமாக ஆர்டிக் துருவப்பகுதியில் அதிகளவில் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால், கடல் நீர்மட்டம் உயர்ந்து, ஆசியாவின் வங்க தேசத்தையும், அமெரிக்காவின் ஃப்ளோரிடா உள்ளிட்ட நகரங்கள் தண்ணீருக்குள் மூழ்கடுத்துவிடும் என்ற அபாயகரமான கணிப்புகளும் வெளியாகியுள்ளது. இது தொடர்ந்து இறுதியில், உலகம் முழுவதும் உள்ள 80 முதல் 90 சதவிகித மக்களும் பலியாவார்கள் என்பதும், ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும் என்ற அதிர்ச்சி அறிக்கையும் வெளியாகியுள்ளது. உலகம் எதிர்கொள்ளும் இந்த அபாயத்தை, உலக மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.