உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்துக்கு எதிரான வீடியோவை பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், யோகி ஆதித்யாநாத்துக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதை டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாத் கனோஜியா பிறருடன் பகிர்ந்து கொண்டார். இதைடுத்து, அந்த பெண்ணையும், பிரசாத் கனோஜியாவையும் உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர். பிரசாத் கனோஜியா கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கனோஜியாவை கைது செய்தது தவறானது என குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது. பத்திரிகையாளர் பிரசாத் கனோஜியாவை கைது செய்தது முட்டாள் தனமானது என்றும், அவரை உத்தரப்பிரதேச போலீசார் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.