மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், நாளை கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டது. இது இன்றுடன் முடிவதையொட்டி, மீண்டும் மீன்பிடி தொழிலை துவக்க, மீனவர்கள் தயாராகி வருகின்றனர். விசைப்படகு மற்றும் மீன்பிடி வலைகளை தயார் நிலையில் வைத்துள்ள மீனவர்கள், இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவுள்ளனர். தடைக்காலம் நிறைவடைந்து மீன் பிடிக்க செல்வதால் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடந்த 2 மாதமாக வஞ்சிரம், வவ்வால் மீன்கள் கிலோ 900 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது சிறிய படகுகளில் செல்பவர்கள் நாளை மறுநாள் கரை திரும்புவர் என்பதால் மீன் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.