கடும் வறட்சி காரணமாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மற்றும் பழங்களின் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீட்டிலிருந்தபடியே பணி செய்யுமாறு பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் பல ஹோட்டல்கள் மூடப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் பலரும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் கொத்தமல்லி கட்டு 10 ரூபாய் வரை விற்று வந்த நிலையில் கோயம்பேடு மொத்த விற்பனையில் 30 ரூபாயாகவும், வெளி இடங்களில் 50 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று தக்காளி விலை ஒரு கிலோ 45 ரூபாய் வரையும், பீன்ஸ் ஒரு கிலோ 160 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது . இதேபோன்று அனைத்து வகை காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தரமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.