செவ்வாய், 9 ஜூலை, 2019

கூந்தன்குளத்தில் அடுத்தடுத்து உயிரிழக்கும் வெளிநாட்டு பறவைகள்! July 09, 2019

Image
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு டிசம்பர் முதல் ஜூலை மாதம் வரை இனப்பெருக்கத்துக்காக வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா, ரஷ்யா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 43 வகையான பறவைகள் வருவது வழக்கம். 
இந்த மாதத்துடன் சீசன் முடிவடையும் சூழலில், பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன.  பறவைகள் மரணத்துக்கு நோய் தாக்கம் காரணமா? இல்லை, உணவில்லாமல் இறக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. 
இதற்கிடையே, தினமும் 70 கிலோ மீன்கள் பறவைகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், பறவைகள் உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். 

credit : Ns7.tv