ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வரும் 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதுகுறித்து, இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள், சமூகத்தில் சாதாரண அமைப்புகள் தொடங்கி, சட்டப்பேரவை வரை சாதி தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும், சாதியை அரசியல் கட்சியினர் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும், இதுதொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டவரைவின் தற்போதைய நிலை என்ன? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர், இந்த நிலையில், ஆணவப் படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு 8 வாரம் கால அவகாசம் கோரியது. இதுபோன்ற உணர்வுப்பூர்வமான வழக்கில் கூட, நீண்ட கால அவகாசம் கேட்பதா? என கண்டித்த நீதிபதிகள், வரும் 22 ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
credit Ns7.tv