புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு புதுச்சேரி மாநில அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், புதுச்சேரி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாய சங்கத்தினர் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
credit ns7.tv