செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

நடந்து முடிந்தது. 72.62 சதவீதம் வாக்குப்பதிவானதாக கலெக்டர் தெரிவித்தார்.

credit dinakaran.com 2019-08-06@ 00:58:33








வேலூர்: வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. 72.62 சதவீதம் வாக்குப்பதிவானதாக கலெக்டர் தெரிவித்தார். வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில்  கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர்  ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர்  போட்டியில் உள்ளனர். மொத்த   வாக்காளர்கள் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர். வேலூர் மக்களவை தொகுதிக்கு  உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 1553 வாக்குச்சாவடி மையங்கள்  அமைக்கப்பட்டது. கடந்த 3ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. அதிகாரிகள்  உட்பட 7 ஆயிரம்  பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குச்சாவடி  பாதுகாப்பு பணியில் 3,957 போலீசார் மற்றும் 1,600 துணை ராணுவப் படையினர்  ஈடுபடுத்தப்பட்டனர். 400 ஊர்க்காவல் படையினரும் பங்கேற்றனர். பதற்றமான வாக்குச்சாவடி  மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. பெண்கள்  மட்டுமே வாக்களிக்கும் பிரத்யேக வாக்குச்சாவடி  மையங்களிலும் பெண்கள்  ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், நோயாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்களுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.