செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

நோட்டரி பப்ளிக் நியமனம் எந்த அடிப்படையில் நடக்கிறது?: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு


credit dinakaran.com 2019-08-06@ 00:59:13







மதுரை: நோட்டரி பப்ளிக் நியமனம் எந்த அடிப்படையில் நடக்கிறது என்பது குறித்து, மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.சோழவந்தானை சேர்ந்த வக்கீல் ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நோட்டரி பப்ளிக் நியமனத்திற்கு கடந்த பிப். 21ல் தேர்வான 748 வக்கீல்களின் பட்டியல் வௌியானது. இதில் எனது பெயர் இல்லை.  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. எனவே, இதை ரத்து செய்து சிறப்பு இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிதாக பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், ‘‘நோட்டரி பப்ளிக் நியமனம் இடஒதுக்கீடு அடிப்படையிலானது அல்ல. நேர்காணலில் பங்கேற்றவர்களில் தகுதியானவர்களுக்கே உரிமம்  வழங்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதி, ‘‘பிப்ரவரி அறிவிப்பின்படி நோட்டரி பப்ளிக் நியமனத்திற்கு எத்தனை பேரை நியமித்தனர்? இதில் எத்தனை பேர், எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்? நேர்காணலில் எந்தமுறை பின்பற்றப்பட்டது என்பது குறித்து  மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஆக. 19க்கு தள்ளி வைத்தார்