திங்கள், 5 ஆகஸ்ட், 2019

இந்திய ஜனநாயகத்திற்கு இது ஒரு கருப்பு தினம்: மெஹபூபா முஃப்தி August 05, 2019

ns7.tv
Image
ஜனநாயக இந்தியாவின் வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கருப்பு தினம் என்று, ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் இன்று அறிவித்தார். 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கான குடியரசு தலைவரின் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது.
News7 Tamil
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார். 
இதன் மூலம் மத்திய அரசின் நோக்கம் தெளிவாவதாக தெரிவித்துள்ள மெஹபூபா முஃப்தி, மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மக்களை அச்சுறுத்த நினைப்பதாகவும், இந்த நடவடிக்கை இந்திய துணைக் கண்டத்தில் பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.