அஸ்ஸலாமு அலைக்கும்!
சமீபகாலமாக பிஜே அவர்கள் பேசுவது போல ஆபாச ஆடியோ ஒன்றை ஒரு சிலர் பரப்பி வருகின்றனர்.
ஒன்பது மாதங்களுக்கு முன்னரும் இது போல ஒரு ஆடியோவை பரப்பினர்.
தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்தவரை சட்டம் அனைவருக்கும் சமம் தான்.
வலியவனுக்கு ஒரு நீதி எளியவனுக்கு ஒரு நீதி எனும் யூதக்கலாச்சாரத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் இடமில்லை.
இதை அனைவரும் நன்கறிவார்கள்.
பிஜேவின் தொலைபேசி உரையாடல் என்று பரப்புவோர் அது செட்டிங் அல்ல உண்மை தான் என்று நிரூபிக்க கடமைப்பட்டுள்ளனர்.
எனவே பிஜே அவர்கள் மீது குற்றம் சுமத்துவோர் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க பொறுப்பேற்றுக் கொண்டு மேலாண்மைக்குழுவை அணுகினால் ஜமாஅத் விதிப்படி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ஜமாஅத் தயாராகவே உள்ளது.
இந்த ஆடியோவுக்கு மட்டுமல்லாமல் இது போன்று எத்தனை ஆடியோக்களை வெளியிட்டாலும் அதற்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் இதுவே.
இந்த ஜமாஅத்தில் யாருக்காகவும் சட்டம் வளையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
கே.எம்.அப்துன்னாசர்
மேலாண்மைக்குழு தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
கே.எம்.அப்துன்னாசர்
மேலாண்மைக்குழு தலைவர்