வியாழன், 5 ஜூலை, 2018

சிப்ஸ் பாக்கெட்களில் அதிக காற்று நிரப்பப்படுவது ஏன் தெரியுமா? July 4, 2018


நம்மில் பெரும்பாலானோருக்கு சிப்ஸ் பாக்கெட்டை பிரித்துப்பார்த்தவுடன் ஏமாற்றமே உண்டாகும். ஏனெனில், சிப்ஸ் பாக்கெட் பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும், அதனுள் இருக்கும் சிப்ஸின் அளவு மிகவும் குறைவானதாகவே இருக்கும். 

சிப்ஸ் பாக்கெட்களில், சாதாரண காற்று நிரப்பப்படாமல், நைட்ரஜன் காற்று நிரப்பப்படுகிறது. சிப்ஸ் எளிதில் கெட்டுப்போகாமல் இருக்கவும் சிப்ஸின் மொறுமொறுப்புத்தன்மை மாறாமல் இருப்பதற்காகவும் இந்த காற்று நிரப்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உணவுப்பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கு சிறந்ததாக நைட்ரஜன் நிறைந்த இடம் இருக்கிறது. 

மேலும், செயற்கை பாதுகாப்பு பொருட்கள் எதையும் கலக்காமலேயே நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் நைட்ரஜன் காற்று பாதுகாக்கிறது. இதுமட்டுமல்லாமல், நாம் சுவாசிக்கும் காற்றில் 78 % நைட்ரஜன் வாயு நமது உடலிற்குள் செல்கிரது. அதனால், சிப்ஸ் பாக்கெட்டுகளில் நிரப்பப்படும் நைட்ரஜன் குறித்து அச்சமடைய வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரிய சிப்ஸ் பாக்கெட்டாக இருந்தால் அதிக சிப்ஸ் இருக்கும் என நினைக்கும் மக்களுக்காகவே, சிப்ஸ் பாக்கெட்டில் நிரப்பப்பட்டுள்ள சிப்ஸின் அளவை  பாக்கெட்டில் குறிப்பிட வேண்டும் என உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.