சனி, 15 செப்டம்பர், 2018

12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வு! September 15, 2018

Image

12-ஆம் வகுப்பு மதிப்பெண்களை 600-ஆக குறைத்து அதன் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் நீட் பயிற்சி மையங்களில் விசாட் தொழில்நுட்பத்தை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மன அழுத்தம் இருப்பதாக மாணவர்கள் கூறிவந்ததால், 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 600-ஆக குறைக்கப்படுவதாகவும், 11-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் தெரிவித்தார்.

11, 12-ஆம் வகுப்புகளில் முழுமையாக தேர்ச்சி பெற்றால் மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறிய செங்கோட்டையன், இன்று முதல் பள்ளிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.