உத்தரப்பிரதேசம் மாநிலம் பஹ்ரெய்ச் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 45 நாட்களில் 71 குழந்தைகள் மரணமடைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பல குழந்தைகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், போதிய வசதி இல்லாததாலும், மருத்த்வர்கள் பற்றாக்குறை காரணமாகவும் பல இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அப்பகுதி மருத்துவ கண்காணிப்பாளரிடம் விசாரித்த பொழுது, மருத்துவமனையில் போதிய வசதியின்மையை ஒப்புக்கொண்ட அவர், மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகள் மட்டுமே உள்தாகவும்450 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதனை முற்றிலுமாக மறுத்துவிட்டு, நோய் காரணமாகவே குழந்தைகள் இறந்ததாக தெரிவித்தது.