சனி, 22 செப்டம்பர், 2018

ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்விப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள்! September 22, 2018

Image

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஒரு ஆண்டுக்கு 220 நாட்கள் கல்வி கற்பிக்க வேண்டும். ஆனால், 2015-16ம் ஆண்டில் 19 சதவீதம் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள நாட்களில் தேர்தல் பணி, போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்கேற்தல் போன்ற அரசு சார்ந்த சில வேலைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக மையம் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 

மேலும், அரசு ஆசிரியர்களின் பணி நேரத்தில் 81 சதவீதம் பிற பணிகளுக்காக செலவிடப்படுகிறது எனவும் அதில் பெரும்பாலானவை கல்வி அல்லாத பிற பணிகளில் செலவிடப்படுகிறது எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகளுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Related Posts: