ஐநா பொதுச்சபை கூட்டத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, தமது 3 மாத கைக்குழந்தையுடன் பங்கேற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றார். மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற பெருமையை பெற்ற அவர், டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட்டை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஜெசிந்தா, நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐநா பொதுக்கூட்டத்தில் தனது 3 மாத கைக்குழந்தை அட்ரென் கேபோர்ட் உடன் கலந்துகொண்டார்.
அவரது குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐநாவின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது. பெண் தலைவர் ஒருவர் ஐநா கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.