வியாழன், 20 செப்டம்பர், 2018

​தமிழகத்தில் MLA-க்கள், MP-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் திறப்பு! September 20, 2018

தமிழகத்தில், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட இருக்கும் இந்த நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ஜி ரமேஷ் திறந்து வைத்தார். விரைவு நீதிமன்றங்கள் போல் இந்த நீதிமன்றம் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பல்வேறு நீதிமன்றங்களில், 178 எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் 324 வழக்குகள் கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
Image

Related Posts: