கள்ளக்குறிச்சியில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில், 9 கிலோ தங்கம் இருந்தது குறித்து லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 4 லாக்கர்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கள்ளக்குறிச்சியில் வாகன தகுதி சான்று வழங்க 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாபு என்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டு விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருடைய வங்கி லாக்கரில் அதிகாரிகள் சோதனை நடததினர்.
அப்போது, லாக்கரில் சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. இதுக்குறித்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.