விமானத்தில் கொசுக்கள் இருந்ததாக பயணிகள் கொடுத்த புகாரையடுத்து இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 1.35 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து அம்ரிட்சர் நகருக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் அம்ரித்சரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுகந்தீப் சிங், தீபிந்தர் சிங் மற்றும் உப்திப் சிங் உள்ளிட்டோர் பயணித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக விமான சிப்பந்திகளிடம் வழக்கறிஞர்கள் புகார் கூறியபோதும் கொசுக்களை விரட்ட நடவடிக்கை எடுக்க இயலாது என சிப்பந்திகள் கைவிரித்துள்ளனர். மேலும் கொசுக்கள் உள்நுழைவது சாதாரன விவகாரமே எனவும் ஒவ்வொரு முறையும் கொசு தடுப்பு நடவடிக்கை எடுக்க இயலாது எனவும் பதிலளித்துள்ளனர்.
விமான சிப்பந்திகளின் இந்த பொறுப்பற்ற பதிலால் ஏமாற்றமடைந்த வழக்கறிஞர்கள் மூவரும், விமானம் அம்ரிட்சர் விமான நிலையத்தை அடைந்தவுடன் விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் இது தொடர்பாக நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இதனிடையே கொசுக்களை விரட்ட சிப்பந்திகள் தரப்பில் போதுமான அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது, எனினும் முழுமையான அளவில் கொசுக்கள் விமானத்திற்கு நுழைவதை தடுக்க முடியாது என இண்டிகோ நிறுவனம் விளக்கமளித்தது.
இருப்பினும் விமான நிறுவத்தின் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று நுகர்வோர் தீர்ப்பாயம் கூறியது. இது விமான நிறுவனத்தின் சேவையில் மொத்த குறைபாடு உள்ளதை காட்டுகிறது இந்த பொறுப்பற்ற வர்த்தக நடவடிக்கையால் நுகர்வோர் மனதளவில் பாதிப்படைந்துள்ளனர் எனவே வழக்கு தொடர்ந்த மூவருக்கும் தலா 40,000 ரூபாய் இழப்பீடாக இண்டிகோ விமான நிறுவனம் தரவேண்டும் எனவும் நுகர்வோர் தீர்ப்பாயத்தின் நுகர்வோர் இழப்பீடு பிரிவிற்கு 15,000 ரூபாயை செலுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.