
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் செல்பி மோகத்தில், நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவிலை சேர்ந்த உதயகுமார், நண்பர்களுடன் பாபநாசம் பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் செல்பி எடுக்கும்போது, தவறி ஆற்றில் விழுந்த செல்போனை எடுக்க உதயகுமார் முயன்றுள்ளார். நீரில் முழ்கி தேடும்போது உதயகுமார், எதிர்பாரவிதமாக பாறைகளின் இடுக்கில் சிக்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் நீண்டநேரம் தேடி சடலத்தை மீட்டனர். இதனைதொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உதயகுமாரின் உடலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.