வெள்ளி, 21 செப்டம்பர், 2018

முதன்முதலாக விண்வெளி சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட ஜப்பானிய தொழிலதிபர்! September 21, 2018

Image


ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் யாசகு மேசாவா (Yusaku Maezawa) என்பவரை முதன்முறையாக நிலவுக்கு அழைத்து செல்ல Space X நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான Space X, விண்வெளி வீரர்கள் தவிர்த்து, மக்களை விண்வெளி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதனை அடுத்து, ஜப்பானை சேர்ந்த பிரபல இணையதள வர்த்தகத்தின் உரிமையாளர் மேசாவா, தான் நிலவுக்கு பயணிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து, மனிதர்களை நிலவுக்கு அழைத்துச்செல்லும் Space X ராக்கெட்டின் அனைத்து சீட்டுகளையும் விலைக்கு வாங்கிவிட்டார்.

இதுமட்டுமல்லாமல், உலகளவில் உள்ள 8 கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஓவியர், திரைப்பட இயக்குநர், இசைக்கலைஞர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட கலைஞர்கள் அந்த பட்டியலில் அடங்குவர்.   அந்த கலைஞர்கள், நிலவிற்கு சென்று திரும்பியதும் நிலவைப் பற்றி ஏதாவது செய்துதர வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், விண்வெளி வீரர்கள் அல்லாமல், விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் மனிதர் என்னும் பெயரை மேசாவா பெற்றுள்ளார். வரும் 2023 ஆண்டில் இவர்கள் நிலவிற்கு அனுப்பப்படுவார்கள் என Space X நிறுவனம் அறிவித்துள்ளது. விண்வெளி சுற்றுலாவிற்காக Space X நிறுவனத்திடன் மேசவா அளித்துள்ள தொகையை வெளியிட மறுத்துவிட்டது Space X நிறுவனம்.