வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பகலில் அதிகமாக தூக்கம் வருவது போல் உணர்பவரா நீங்கள்? September 21, 2018

Image

பகலில் அதிகமாக தூக்கம் வருவது போல் உணர்பவர்களுக்கு அல்சீமர் எனப்படும் மறதி நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பகலில் தூக்கம் வருவது போல் உணர்பவர்களுக்கு மூளையில் படியும் beta amyloid என்ற திரவம் மூன்று மடங்கு அதிகமாக சுரக்கிறது. இதனால், அவர்களுக்கு அல்சீமர் நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிக அளவில் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்காக 123 நபர்களிடம் சோதனை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், அவர்களிடம் பல கேள்விகளை முன்வைத்தனர். அவர்கள் தெரிவித்த பதில்களின் மூலம், பகலில் தூங்குவதனால் ஏற்படும் விளைவுகளை கண்டறிந்தனர்.

அல்சீமர் நோய் ஏற்படுவதற்கான பெரும் காரணியாக பகல் தூக்கம் இருக்கிறது எனவும் முடிந்தவரை இரவில் நன்றாக தூங்கிவிட்டு பகலில் தூங்குவதை தவிர்க்கவேண்டும் எனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை அளித்தனர்.