ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் அழிந்துவிட்டதாக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி சர்வர்களில், ஒரு மாதத்திற்கு மட்டுமே வீடியோ காட்சிகளை சேமிக்க முடியும், என அந்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வரில் புதிய பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாக அழிந்துவிடும், என அப்போலோ மருத்துவமனை சார்பில் புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய இயலாது, என அப்போலோ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யுமாறு, அப்போலோவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது ஆறுமுகசாமி ஆணையம். இந்நிலையில், அப்போலோ தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோல், ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலாளருக்கும், ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, எத்தனை மருத்துவ குறிப்புகள் ராஜ்பவனுக்கு வந்தது? அறிக்கைகள் பெறப்பட்டிருப்பின், பொறுப்பு ஆளுநருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதா?, என்றும் ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும், ஜெயலலிதா உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மற்றும் ராஜ்பவனுக்கு இடையே, கடிதத் தொடர்பு இருந்ததா? என்பது உட்பட ஆளுநர் மாளிகையிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.