ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை; பொன்மாணிக்கவேல் குழுவுக்கு வழக்கு மாற்றம்! September 23, 2018

Image

நாகை மாவட்டத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்பியன் மாதேவி ஐம்பொன் சிலை தொடர்பான வழக்கு தற்போது ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்த ஐம்பொன் சிலை கடத்தல் தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அவர் இந்த ஐம்பொன் சிலை தற்போது அமெரிக்க நாட்டின் வாஷிங்டனில் உள்ள பிரியர் ஆர்ட் கேலரி என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளாதாகவும், அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் சமர்பித்திருந்தார்.

இந்த புகாரின் பெயரில் கடந்த 22 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கு தற்போது ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Posts: