வெள்ளி, 14 செப்டம்பர், 2018

மனித திசுக்களுக்கு இணையான மாற்றுத் திசுவை உருவாக்கி, மதுரை அரசு மருத்துவர் சாதனை! September 14, 2018

மனித திசுக்களுக்கு இணையான மாற்றுத் திசுவை உருவாக்கி, மதுரை அரசு மருத்துவர் செந்தில்குமார் சாதனை படைத்துள்ளார். 

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கதிரியக்க இயற்பியல் துறையில், செந்தில்குமார் உதவிப் பேராசிரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் மனித திசுக்களுக்கு இணையான போலஸ் என்ற மாற்றுத்திசுவை உருவாக்கினார். இவரது கண்டுபிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் முதல் பரிசைப் பெற்றுள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இரண்டு வருட கடும் ஆய்வின் மூலம், மனித திசுக்களுக்கு இணையான மாற்றுப் பொருளை கண்டுபிடித்ததாகக் கூறினார்.

பின்னர் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன், இந்த கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்ககூடிய ஒன்று என கூறினார்.

Related Posts: