இந்தியாவில் உள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 21 சதவீதத்திற்கு பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கான அலுவலகங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை இனி காணலாம்..
இந்தியாவில் மொத்தம் 2.48 லட்சம் கிராம பஞ்சாயத்து ஒன்றியங்கள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 52000 கிராம பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு அலுவலகங்கள் இல்லை. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 26,ஆயிரத்துக்கும் மேலான பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு அலுவலகங்கள் இல்லை.
பஞ்சாப், ஜம்மு, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 % மேலான பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு அலுவலகங்கள் அமைக்கப்படவில்லை. இருந்தும் 2018 -19 ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கான அலுவலகங்கள் கட்டுவதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஒன்றியங்களுக்கும் பஞ்சாயத்து அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.