சனி, 22 செப்டம்பர், 2018

மேலூரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் நகர் குடியிருப்பில் பாயும் பாசன நீர்! September 22, 2018

Image

மேலூரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் நகர் குடியிருப்பு பகுதியில் பாயும் பாசன தண்ணீர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதி ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கடந்த 1 மாதமாக பாய்ந்து வரும் சூழலில் , இன்னும் முறையாக கடைமடை வரை தண்ணீர் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு.

மேலூர் பகுதி விவசாயிகள் மத்தியில் எழுந்து வரும் சூழலில் தற்போது மேலூர் நகர் வழியாக செல்லும் கொட்டக்குடி பிரதான கால்வாயின் 2 வது மடையில் தண்ணீர் நிரம்பி செல்கின்றது.

இதனால் தண்ணீர் வீணாக அருகிலுள்ள வெங்கடேஸ்வரா குடியிருப்பு பகுதி முழுவதும் தண்ணீரால் நிரம்பி வழிகின்றது. இது கால்வாயை முறையாக பொதுப்பணித்துறையினர் சுத்தம் செய்யாமல் அலட்சியம் காட்டியதின் விளைவே இதுபோன்று குடியிருப்பு பகுதியில் பாய்வதாக குடியிருப்பு வாசிகள் குமுறுகின்றனர்.

இதில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நடப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக ஒருபக்கம் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.