Home »
» திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை 1991-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறந்துவைத்தார். பெரியார் கைத்தடியுடன் நிற்கும் முழு உருவச் சிலையாக இது இருந்துவந்தது. இந்த பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனக் கோரியுள்ள அவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளனர். புறக்காவல் நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசி அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெரியாரின் சிலையை அவமதிப்பு செயலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சென்னை அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் சிலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து, தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு என்பது அரக்கத்தனமான செயல் எனவும், இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
அப்பாவிகளை கைது செய்யும் தமிழக அரசு, லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கைது செய்யாதது ஏன் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக எம்.பி.க்கள், மத்திய அரசின் ஏவலர்களாக செயல்பட்டு வருவதாக விமர்சித்துள்ளார்.தமிழகத்திற்கு நல்ல அரசு அமைய வேண்டும் அதற்கு ஆட்சி மாற்றம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Posts:
எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு! June 13, 2018
பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து… Read More
தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை : முழு கொள்ளளவை எட்டும் அணைகள்! June 13, 2018
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக பரவலாக பெய்து வரும் மழையால், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம… Read More
யானைகள் மற்றும் மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! June 13, 2018
மேகமலை வனச்சரகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.தேனி மாவட்டம் மேகமலை வனஉயிரின கோட்டத்திற்குட்பட்ட வருசநாடு, மேகமலை வனச்சரக… Read More
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் நூதனப் போராட்டம்! June 12, 2018
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறக்கப்படாததால், நாகை மாவட்ட விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி நூதனப் போராட… Read More
வரலாற்று சிறப்புமிக்க சரித்திர சந்திப்பு June 12, 2018
பல்வேறு சந்தேகங்கள் மற்றும் ஊகங்களை தாண்டி, உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர், வடகொரிய அதிபர்களிடையேயான சந்திப்பு நிகழ்ந்து… Read More