சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தை அடமானம் வைத்து தனியார் நிறுவனம், ஆயிரத்து 350 கோடி ரூபாய் கடன் வழங்க வங்கிக்கு தடை விதிக்கக்கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெடரப்பட்டுள்ளது.
இது குறித்து கொடுங்கையூரை சேர்ந்த கலாமின் அக்கினி சிறகுகள் அறக்கட்டளையின் செயலாளர் செந்தில் குமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, சுமார் 20 ஏக்கர் நிலத்தை ஐ.ஜி- 3 இன்போ என்ற தனியார் நிறுவனம், அடமானமாக வைத்து, ஆக்ஸிஸ் வங்கியில், ஆயிரத்து 350 கோடி ரூபாய் கடன் பெற முயற்சிப்பதாகவும், அந்த அடமான பத்திரம் பதிவுக்காக சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதையும் சுட்டிகாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.