அழகுசாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் பெண்களுக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படும் என அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
509 பெண்களின் சிறுநீரை சோதனைக்கு உட்படுத்தியதில், பெரும்பாலான பெண்களின் உடலில் பாரபன் (parabens) மற்றும் பென்சோபீனான் (benzophenones) அதிக அளவில் கலந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும், இவை அனைத்தும் பெண்கள் தினமும் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களில் இருப்பவை என தகவல் தெரிவித்தனர்.
இதுமட்டுமல்லாமல், இதுபோன்று அதிக அளவில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்சனை, மலட்டுத்தன்மை மற்றும் பல தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.